Saturday, 8 November 2014

புறநானூறு 79 Purananuru 79

அரங்கில் முழங்கும் இந்தக் கிணைப்பறை முழக்கம்
நெடுஞ்செழியன் போர்க்களம் சென்றபோது
பின் செல்லும் முழக்கமாகத்
தொடர்ந்து சென்றது 
மதுரை மூதூர் குளத்தில் நீராடிய பின்னர், (தன் குடிக்கு உரிய அடையாளப் பூவாகிய) வேப்பம்பூக் குழையைத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை பின்தொடர்து முழங்கிக்கொண்டு வர, செழியன் போர்க்களத்துக்கு வந்திருக்கிறான். வம்புக்கு எதிர்த்து நிற்கும் போர்மறவர்ளோ பலர். போரிடும் பகல் காலமோ சிறியது. இன்றைய போரில் சிலர் செழியனால் கொல்லப்படாமல் மிஞ்சிவிடுவார்களோ?

பாடல்

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;                    5
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?

திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.