Wednesday, 5 November 2014

புறநானூறு 75 Purananuru 75

சோளத்தட்டை வெண்டு (தக்கை)
தண்ணீரில் மிதப்பது போல்
விழுமியோனுக்கு ஆட்சிப்பேறு நொய்தானது
மூத்தோர் இறந்த பின்னர் வழிவழியாகப் பெறும் அரசுப் பேற்றினைச் சிறியோன் பெறின் அது அவனுக்குச் சிறந்தது.
விழுமியோன் பெறின் அது அவனுக்குக் குளத்து நீரில் மிதக்கும் சோளத்தட்டை வெண்டு போல இலேசானது.
சிறியோன் யார்? – எனக்குச் சிறப்புக் கிடைத்துள்ளது என்று குடிமக்களிடம் புரவு(காப்பு வரி) அதிகமாக வாங்குபவன்.
விழுமியோன் யார்? – பெரும்போரைத் தாங்கவல்ல வலிமை-முயற்சி உள்ளவன்.

பாடல்   

'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென,
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக்
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே;            5
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர்
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மை அற்று,                  10
விசும்புற ஓங்கிய வெண் குடை,
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி