பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தில் துஞ்சியவன்.
புலவர் அவனை வாழ்த்துகிறார்.
மார்பில் முத்தாரம் அணிந்தவன்.
அவன் கை அவனது
முழந்தாள் வரை நீண்டிருக்கும்.
தகைமைப் பண்பு மிக்கவன்.
விருப்பத்துடன் கொடை வழங்குபவன்.
தெளிவில்லாமல் யாராயிருந்தாலும் வழங்குபவன்.
யாருக்கும் வழங்காமல் இருந்ததில்லை. (பொய்
தேற்றாதவன்).
அவனது பகைவர்க்குச் சுட்டெரிக்கும் சினத்துடன்
கடலில் தோன்றும் ஞாயிறு
போன்றவன்.
மற்றவர்களுக்கு குளுமையான ஒளி தரும் நிலா போன்றவன்.
பாடல்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
திணை பாடாண்;
துறை பூவை நிலை.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
முதல்
கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு

Very interesting to see such valuable work of our forefathers.
ReplyDeletenice of your thought
Delete