Thursday, 2 October 2014

புறநானூறு 13 Purananuru 13


பெருநற்கிள்ளி
இப்படித்தான்
அன்று
களிற்றின்மேல்
சென்றான்
போலும்
  • இவன் யார் என்று கேட்பாயானால், சொல்கிறேன் கேள்.
  • அழகிய நெஞ்சில் புலிநிறம் பட்ட கவசம் அணிந்தவன். அந்த நிறம் பிறர் எய்த அம்புகளால் உருவானது. எமன் போன்ற களிற்றின்மேல் உள்ளான்.
  • அது கடலில் மிதக்கும் நாவாய்க் கப்பல் போல் வருகிறது. அதனைச் சூழ்ந்து சுறாமீன் கூட்டம் போல் வாள்வீரர்கள் மொய்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தக் களிற்றுக்கு மதம் பிடித்துவிட்டது என்பது அந்த வாள்வாரர்களுக்குத் தெரியவில்லை.
  • அம்மம்ம!
  • அவன் துன்பம் இல்லாமல் திரும்புவானாக!
  • மயில் உகுத்த தோகையை உழவர் நெல் கட்டோடு சேர்த்துக் கட்டும் வயல்நாட்டை உடையவன் அவன். கொழுத்த மீனில் விளைந்த கள்ளைப் பருகும் மக்கள் பருகும் நாட்டை உடையவன் அவன்.
பெருநற்கிள்ளி 
(முடித்தலைக்கோ)
அந்துவஞ்சேரல் 
இரும்பொறை
முடமோசியார் 
(உறையூர் ஏணிச்சேரி)
ஆகியோர் 
சமகாலத்தவர்
*
பகைவனைக் 
காப்பாற்றிய பாங்கு
*
மீன்-கள்
பாடல்
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.
               
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.