Wednesday, 1 October 2014

புறநானூறு 12 Purananuru 12


சங்க காலப் புலவர்கள்
இவ்வாறு யானைமீது
ஊர்ந்து செல்லுமாறு
யானைகள் பரிசாக
வழங்கப்பட்டன
  • உன்னைப் பாடும் பாணர்கள் நீ வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர். புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும் தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர்.
  • வெற்றியைக் குவிக்கும்குடுமிவேந்தே!
  • பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்ஃபம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ?

போர்
அறம் அன்று
என
அறிவுரை
கூறப்பட்டது
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

பாடல்
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

திணை அது; துறை இயன்மொழி.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.