Friday, 26 September 2014

குறுந்தொகை 401 KurunThogai 401

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!

மெய் தோய்
நட்பு
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது.
அம்மூவன்

துறைவனொடு சிரித்து விளையாடுவதை நான் விலக்கவில்லை. அது தோளைத் தழுவிய நட்பு. அது மிகமிக நுட்பமானது.
நீர் ஒழுகும் கூந்தலில் அடும்பு மலரைச் சூடிக்கொண்டு ஓரை விளையாடும் மகளிர்க்கு அஞ்சி ஈரத்தில் வாழும் நண்டு கடலுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் துறைவன் அவன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.