Friday, 26 September 2014

புறநானூறு 1 Purananuru 1


அருந்தவத்தோன்
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை:
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப:
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே:
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து,
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே.

கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.

  • தலையில் கொன்றைப் பூ சூடியவன்.
  • மார்பில் கொன்றை-மாலை அணிந்தவன்.
  • ஊர்தி வெண்ணிறக் காளைமாடு.
  • கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர்.
  • தொண்டையில் நஞ்சுக் கறை.
  • அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது.
  • ஒருபாதி (இடப்புறம்) பெண்-உருவம்.
  • அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு.
  • நெற்றியில் பிறை.
  • அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும்.
  • அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன்.
  • நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன்.
  • தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை.
  • இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.
காலம்      : கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
ஆங்கிலத்தில்இதன் செய்தி
நீர் அறவு அறியாக் கரகம்

கொன்றை




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.