Saturday, 29 March 2014

புணர்ச்சி - ஒற்று மிகுமா மிகாதா

புணர்ச்சியில் 
வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாயின் 
ஒற்று மிகுமா மிகாதா 
என்பதை அறியச் 
சில கண்ணோட்டங்கள் தேவை. 
அவற்றை வரிசைப்படுத்திக் கொள்வோம்.
*
ஒற்று மிகும் இடங்களில்
ல் ன் ள் ண்
மெய்யீறு திரியும்
*
சில அடிப்படைகள்

* உயர்திணை முன் மிகாது
கந்தன் கை
வள்ளி கை
** தெய்வப்பெயர் விரவுத்திணை மிக்கும் வரும்
குமரி கோட்டம், குமரிக்கோட்டம்
குமர கோட்டம், குமரக்கோட்டம்
* எழுவாய் முன் மிகாது
முருகன் கண்டான்
வள்ளி கண்டாள்
* பயனிலை முன் மிகாது
வந்தான் கண்ணன்
விழுந்தது கல்
* விளி முன் மிகாது
கந்தா கொடு
* பெயரெச்சம் முன் மிகாது
வந்த காளை
**ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்
வாராக் காலம்
* செயப்படுபொருள் தொடர் முன்
** உயர்திணை முன் மிகும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - திருக்குறள்
அவர்க்காணலுற்று - திருக்குறள்
தற்கொண்டாற்(ன்)பேணி - திருக்குறள்
** அஃறிணை முன் மிகாது
தமிழ் படி
ஆத்தி சூடி
* ஐ வேற்றுமை முன் மிகும்
தமிழைப் படி
* கு வேற்றுமை முன் மிகும்
ஊருக்குப் போ
* சுட்டு, வினா முன் மிகும்
அக்கனி, இக்கனி, உக்கனி, எக்கனி
அந்தக் கனி, இந்தக் கனி, உந்தக் கனி, எந்தக் கனி
அணிக் கொண்டான் (அப்போது கொண்டான்)
அதோளிக் கொண்டான் (அவ்விடத்தில் கொண்டான்)

ஒலி-நோக்கு

ஓரெழுத்து-ஒருமொழி - மிக்கும் மிகாமலும் வரும்
பூ பறி, பூப்பறி
ஈரெழுத்தொருமொழி - மிக்கும் மிகாமலும் வரும்
கடு தின்றறான், கடுத்தின்றான்
குறிலிணை ஒற்று - ஒற்று இரட்டும்
கண்+ஐ=கண்ணை, கண்ணுக்கு
கல்+ஐ=கல்லை, கல்லுக்கு
பொய்+ஐ=பொய்யை, பொய்யினுக்கு
நெடிலிணை ஒற்று முன், பிற முன் - ஒற்று இரட்டாது
மான் - மானை, மானினை, மானுக்கு
கால் -காலை, காலினை, காலுக்கு
மெய் - மெய்யை, மெய்யினை, மெய்யினுக்கு, மெய்க்கு
பயிர் - பயிர்க்கு, பயிருக்கு


எழுத்து-நோக்கு
ல் - திரிபு
கல் தளம் - கற்றளம்
கல் தீது - கஃறீது
கல் நன்று - கன்னன்று
கல் மரம் - கன்மரம்
அல் திணை - அஃறிணை
கல் கண்டு - கற்கண்டு
ள் - திரிபு
முள் படுக்கை - முட்படுக்கை
முள் தீது - முஃடீது
முள் நுனி - முண்ணுனி
முள் மரம் - முண்மரம்
ன் - திரிபு
முன் - முன்னுக்குத் தள்ளு
மான் - மானுக்குக் கொம்பு
வீரன் - வீரனுக்கு
ண் - திரிபு
கண் - கண்ணுக்கு மை
நாண் - நாணுக்கு வேலி
அரண் - அரணுக்கு அப்பால்
ம் - திரிபு
செம் - செம்முக் கடிது (செம் = செம் மரம்)
பேம் - பேமுக் கருமை (பேம், பேஎம் = மழைமேகம்)
மரம் - மரக்கிளை, மர நிழல், மர வேர்
ய் - முன்
பொய் - பொய்ச்சொல், பொய்ம்மழை, பொய்வழக்கு
நாய் - நாய்க்கால், நாய்முடி, நாய்வழக்கு
வேய் - வேய்ங்குழல்
தாய் - தாய்ப்பால், தாய்முகம், தாய்வினை
ர் - முன்
வேர் - வேர்ச்சொல், வேர்நுனி, வேர் வடிவம், 
புதர் - புதர்ச்செடி, புதர்முள், புதர்வீடு
தேவர் - தேவர் சொல், தேவர்மலை, தேவர்வீடு (உயர்திணை)
ழ் - முன்
வீழ் (விழுது) - வீழ்க்கால், வீழ்நுனி, 
தமிழ் - தமிழ்ச்சொல், தமிழ்மணம், தமிழ்யாழ் (தமிழ்ப்பண்)
ஞ் - முன்
உரிஞ் (தோல்) - உரிஞுக்கடிது, உரிஞு கடுமை, உரிஞு மடி
ந் -முன்
பொருந் (பொருநரின் இசைக்கருவிகள்) - பொருநுப்பை, பொருநு முழக்கு

தொகைநிலை

வினைத்தொகை மிகாது
ஆடுபாம்பு, பாடுபொருள்
உம்மைத்தொகை மிக்கும் மிகாதும் வரும்
பொரிகடலை, வடைகறி, வெற்றிலைப்பாக்கு

வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் வரும்போது
சாரியை பெற்றும் பெறாமலும்
குறைந்தும், மிக்கும்
வல்லினம் மிக்கும், மெல்லினம் மிகும்
வரும் பாங்குகளுக்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
மேலும் இதனை அடியொற்றிப் பார்த்துக்கொள்ளலாம்.


குற்றியலுகரம் முன்
ஆறு - ஆற்றுப்படுகை, ஆற்றுமணல் நெடில் தொடர்
உலகு - உலகப் போர், உலக நேரம், உலக வழக்கம் உயிர்த் தொடர்
வழக்கு - வழக்குச்சொல், வழக்கின்மேல் வன்தொடர்
கரும்பு - கரும்புப்பயிர், கருப்பங்கட்டி, கரும்புநுனி மென்தொடர்
ஈர்க்கு - ஈர்க்குப் பிளவு, ஈர்க்கு நுனி இடைத்தொடர்
எஃகு - எஃகுக்கோல், எஃகுநுனி ஆய்தத் தொடர்

இருவழியும் சரி

எழுத்துக்கள் - து - குற்றியலுகர ஒலி
எழுத்துகள் - து - முற்றியலுகர ஒலி
உறுப்புக்கள் - பு - குற்றியலுகர ஒலி
உறுப்புகள் - பு - முற்றியலுகர ஒலி
பாட்டுக்கள் - டு - குற்றியலுகர ஒலி
பாட்டுகள் - டு - முற்றியலுகர ஒலி (இப்படிப் பிறவும்)





No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.