Monday, 31 March 2014

எழாஅல்

எழால் என்பது
இது ஒருவகைப் புள் (பறவை) Falcon

எழாஅல் என்பது
ஓர் இசைக்கருவி

தொல்காப்பியம் என்னும் பண்டைய இலக்கண நூல் இதனைக் குறிப்பிடுகிறது. (பொருளதிகாரம் மரபியல் நூற்பா எண் 45)

மயில், எழால் ஆகிய பறவைகளில் ஆண்-பறவையைப் 
போத்து என்று வழங்குதல் மரபு என அந்த நூல் குறிப்பிடுகிறது. 

பொருநர் ஆற்றுப்படை என்னும் சங்ககால நூல் இந்த இந்த இசைக்கருவியைக் குறிப்பிடுகிறது
இதன் பெயர் எழால். 
பொருநர் எழால் அதாவது எழுப்பும் இசைக்கருவியை முழக்குவர்.

பாடும் பாடலின் இசைக்கேற்ப முழக்குவர்.

பாடல் முற்றிய பயன் தெரி எழாஅல்
கோடியல் தலைவ - பாடல் அடி 56,57

கோடு இயல் தலைவன் என்பவன் பொருநன்


வெல்லாளன் கோட்டை நடுகல்

பட்டவனுக்கு நடப்பட்ட கல் நடுகல்.


தந்தையும் மகனும் புலியோடு போரிடும் காட்சி.

இதனைச் சொடுக்கி விளக்கம் அறியலாம். 

Sunday, 30 March 2014

கந்தன் யார்


முருகக் கடவுளைக் கந்தன் என்கிறோம்.

கந்தன் என்னும் சொல்லுக்குத் துணைவன் என்று பொருள்
காதன்மைக் கந்தா அறிவு அறியார் தேர்தல் - திருக்குறள்
கந்து என்றால் தூண். கந்தன் என்றால் தூண் போல் நம்மைத் தாங்குபவன் என்று பொருள்
கந்திற் பாவை (தூணில் செதுக்கப்பட்டுள்ள பாவை) - மணிமேகலை
நிக்கந்தக் கோட்டம்
சமணர் தெய்வத்தின் பெயர் - சிலப்பதிகாரம்

தமிழ்நெறி <|> வடநெறி

தமிழ் நெறியில் சேயோன் என்னும் முருகன் குறிஞ்சிநிலத் தெய்வம். குறிஞ்சிநில ஒழுக்கம் புணர்ச்சி. இந்தப் புணர்ச்சி மணம். அதாவது திருமணம்.
திருமணத்தைக் குறிக்கும் மணம் வேறு.
வாசனையைப் குறிக்கும் மணம் வேறு.
முருகன் தமிழர் தெய்வம்.
மணம் என்னும் சொல்லை ஸ்கந்தம் என வடநூலார் புரிந்துகொண்டனர்..

நாராயணாய - மந்திரம்

ஓம் நமோ நாராயணாய
அட்டாச்சரம்
அட்டாட்சரம்
எட்டெழுத்து

நாராயணாய
ஐந்தெழுத்து

நாரணன்
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
2 ஆம் திருவந்தாதி வெண்பா 1


நார் ஆய் அண் ஆய = நாராயணாய
நார் = அன்பு
நலத்தின்கண் நார் இன்மை - திருக்குறள் 958
நார் இன்மை பேதை தொழில் - திருக்குறள் 833
நாராய் = அன்பாய்
அண் = அண்ணி இருப்பவன், நெருக்கமாய் இருப்பவன்
அண்ணன் நம்முடன் அண்ணிப் பிறந்தவன்
ஆய = ஆயமாய் இருப்பவன்

நாராயணாயம் நாராயண - ம் ஒற்று இடையில் உள்ளது.
அறம்+நெறி=அறநெறி என்பது போல

அன்பாய் அண்ணிக் கிடக்கும் ஆயம்
நாராயணாயம்

வடமொழியில் இதற்கு வேறு விளக்கம் காண்பர்.

Saturday, 29 March 2014

நமசிவாய - மந்திரம்


நமசிவாய - தமிழ்நெறி விளக்கம்.

நமசிவாய நமசிவாய என்று சொல்லும்போது நமசிவாயம் நமசிவாயம் ... என ம் ஒலி இடையில் வரும்.
எடுத்துக்காட்டு அறம்+நெறி=அறநெறி

நம சிவ் ஆயம்

நம = நம்முடையவை
நம்+அ=நம
அது - ஆறாம் வேற்றுமை உருபு ஒருமை
அ - ஆறாம் வேற்றுமை உருபின் பன்மை
சிவ் = நம் உடலில் உள்ள சிவ் என்னும் உணர்வோட்டம்
ஆயம் = ஆயத்தார்

நம்முடையவை நம்மை ஒத்த உணர்வுள்ள ஆயம்
நம் ஆயம் நம்மை ஒத்த உணர்வு

திருமூலர் 
இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் 
உருவாரப் பொருள் கற்பிக்கிறார்.

எனினும் அவர் கண்ட முடிவு

சிந்தையே சிவன் - திருமந்திரம் 2853
சிந்தையது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சீவனே சிவன் - திருமந்திரம் 20176
சீவன் எனச் சிவன் என வேறு இல்லை




புணர்ச்சி - ஒற்று மிகுமா மிகாதா

புணர்ச்சியில் 
வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாயின் 
ஒற்று மிகுமா மிகாதா 
என்பதை அறியச் 
சில கண்ணோட்டங்கள் தேவை. 
அவற்றை வரிசைப்படுத்திக் கொள்வோம்.
*
ஒற்று மிகும் இடங்களில்
ல் ன் ள் ண்
மெய்யீறு திரியும்
*
சில அடிப்படைகள்

* உயர்திணை முன் மிகாது
கந்தன் கை
வள்ளி கை
** தெய்வப்பெயர் விரவுத்திணை மிக்கும் வரும்
குமரி கோட்டம், குமரிக்கோட்டம்
குமர கோட்டம், குமரக்கோட்டம்
* எழுவாய் முன் மிகாது
முருகன் கண்டான்
வள்ளி கண்டாள்
* பயனிலை முன் மிகாது
வந்தான் கண்ணன்
விழுந்தது கல்
* விளி முன் மிகாது
கந்தா கொடு
* பெயரெச்சம் முன் மிகாது
வந்த காளை
**ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்
வாராக் காலம்
* செயப்படுபொருள் தொடர் முன்
** உயர்திணை முன் மிகும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - திருக்குறள்
அவர்க்காணலுற்று - திருக்குறள்
தற்கொண்டாற்(ன்)பேணி - திருக்குறள்
** அஃறிணை முன் மிகாது
தமிழ் படி
ஆத்தி சூடி
* ஐ வேற்றுமை முன் மிகும்
தமிழைப் படி
* கு வேற்றுமை முன் மிகும்
ஊருக்குப் போ
* சுட்டு, வினா முன் மிகும்
அக்கனி, இக்கனி, உக்கனி, எக்கனி
அந்தக் கனி, இந்தக் கனி, உந்தக் கனி, எந்தக் கனி
அணிக் கொண்டான் (அப்போது கொண்டான்)
அதோளிக் கொண்டான் (அவ்விடத்தில் கொண்டான்)

ஒலி-நோக்கு

ஓரெழுத்து-ஒருமொழி - மிக்கும் மிகாமலும் வரும்
பூ பறி, பூப்பறி
ஈரெழுத்தொருமொழி - மிக்கும் மிகாமலும் வரும்
கடு தின்றறான், கடுத்தின்றான்
குறிலிணை ஒற்று - ஒற்று இரட்டும்
கண்+ஐ=கண்ணை, கண்ணுக்கு
கல்+ஐ=கல்லை, கல்லுக்கு
பொய்+ஐ=பொய்யை, பொய்யினுக்கு
நெடிலிணை ஒற்று முன், பிற முன் - ஒற்று இரட்டாது
மான் - மானை, மானினை, மானுக்கு
கால் -காலை, காலினை, காலுக்கு
மெய் - மெய்யை, மெய்யினை, மெய்யினுக்கு, மெய்க்கு
பயிர் - பயிர்க்கு, பயிருக்கு


எழுத்து-நோக்கு
ல் - திரிபு
கல் தளம் - கற்றளம்
கல் தீது - கஃறீது
கல் நன்று - கன்னன்று
கல் மரம் - கன்மரம்
அல் திணை - அஃறிணை
கல் கண்டு - கற்கண்டு
ள் - திரிபு
முள் படுக்கை - முட்படுக்கை
முள் தீது - முஃடீது
முள் நுனி - முண்ணுனி
முள் மரம் - முண்மரம்
ன் - திரிபு
முன் - முன்னுக்குத் தள்ளு
மான் - மானுக்குக் கொம்பு
வீரன் - வீரனுக்கு
ண் - திரிபு
கண் - கண்ணுக்கு மை
நாண் - நாணுக்கு வேலி
அரண் - அரணுக்கு அப்பால்
ம் - திரிபு
செம் - செம்முக் கடிது (செம் = செம் மரம்)
பேம் - பேமுக் கருமை (பேம், பேஎம் = மழைமேகம்)
மரம் - மரக்கிளை, மர நிழல், மர வேர்
ய் - முன்
பொய் - பொய்ச்சொல், பொய்ம்மழை, பொய்வழக்கு
நாய் - நாய்க்கால், நாய்முடி, நாய்வழக்கு
வேய் - வேய்ங்குழல்
தாய் - தாய்ப்பால், தாய்முகம், தாய்வினை
ர் - முன்
வேர் - வேர்ச்சொல், வேர்நுனி, வேர் வடிவம், 
புதர் - புதர்ச்செடி, புதர்முள், புதர்வீடு
தேவர் - தேவர் சொல், தேவர்மலை, தேவர்வீடு (உயர்திணை)
ழ் - முன்
வீழ் (விழுது) - வீழ்க்கால், வீழ்நுனி, 
தமிழ் - தமிழ்ச்சொல், தமிழ்மணம், தமிழ்யாழ் (தமிழ்ப்பண்)
ஞ் - முன்
உரிஞ் (தோல்) - உரிஞுக்கடிது, உரிஞு கடுமை, உரிஞு மடி
ந் -முன்
பொருந் (பொருநரின் இசைக்கருவிகள்) - பொருநுப்பை, பொருநு முழக்கு

தொகைநிலை

வினைத்தொகை மிகாது
ஆடுபாம்பு, பாடுபொருள்
உம்மைத்தொகை மிக்கும் மிகாதும் வரும்
பொரிகடலை, வடைகறி, வெற்றிலைப்பாக்கு

வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் வரும்போது
சாரியை பெற்றும் பெறாமலும்
குறைந்தும், மிக்கும்
வல்லினம் மிக்கும், மெல்லினம் மிகும்
வரும் பாங்குகளுக்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
மேலும் இதனை அடியொற்றிப் பார்த்துக்கொள்ளலாம்.


குற்றியலுகரம் முன்
ஆறு - ஆற்றுப்படுகை, ஆற்றுமணல் நெடில் தொடர்
உலகு - உலகப் போர், உலக நேரம், உலக வழக்கம் உயிர்த் தொடர்
வழக்கு - வழக்குச்சொல், வழக்கின்மேல் வன்தொடர்
கரும்பு - கரும்புப்பயிர், கருப்பங்கட்டி, கரும்புநுனி மென்தொடர்
ஈர்க்கு - ஈர்க்குப் பிளவு, ஈர்க்கு நுனி இடைத்தொடர்
எஃகு - எஃகுக்கோல், எஃகுநுனி ஆய்தத் தொடர்

இருவழியும் சரி


எழுத்துக்கள் - து - குற்றியலுகர ஒலி
எழுத்துகள் - து - முற்றியலுகர ஒலி
உறுப்புக்கள் - பு - குற்றியலுகர ஒலி
உறுப்புகள் - பு - முற்றியலுகர ஒலி
பாட்டுக்கள் - டு - குற்றியலுகர ஒலி
பாட்டுகள் - டு - முற்றியலுகர ஒலி (இப்படிப் பிறவும்)





புணர்ச்சி - தமிழ்

நிலைமொழி + வருமொழி

மெய் + உயிர்
கண் + அழகு = கண்ணழகு
கால் + அழகு = காலழகு

உயிர் + உயிர்
பல + ஆம் = பலவாம் [+வ்]
நிலா + ஆம் = நிலாவாம் [+வ்]
ஆவன்னா [வ்] வாய்பாடு
ஆ + இருதிணை = ஆயிரு திணை [+ய்] - ஆ என்பது சுட்டு
மா + இரு ஞாலம் = மாயிரு ஞாலம் [+ய்] - மா என்பது உரிச்சொல்

மணி + ஆம் = மணியாம் [+ய்]
ஈ + ஆம் = ஈயாம் [+ய்]
ஈயன்னா [ய்] வாய்பாடு
மடு + ஆம் = மடுவாம் [+வ்]
தூ + ஆ +மை = தூவாமை [வ்] - தூ=உண்
ஊவன்னா [வ்] வாய்பாடு
தே+அன்=தேவன் [வ்]
அவனே+அல்லன்=அவனேயல்லன் [ய்]
ஏயன்னா [ய்] வாய்பாடு
தென்னை+அன்று=தென்னையன்று [ய்]
ஐயன்னா [ய்] வாய்பாடு
கோ+அன்று=கோவன்று [வ்] - பெயர்ச்சொல்
கோ+இல்=கோயில் [ய்] - கோ=தலைமை - உரிச்சொல்
ஓவன்னா [வ்] வாய்பாடு
ஔவை, கௌவை, தௌவை, மௌவல் - [வ்]
ஔவன்னா [வ்] வாய்பாடு


புணர்ச்சி

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது புணர்ச்சி.
இது வாழ்வியல்.

தமிழ் மொழியில் நிலைமொழியும் வருமொழியும் இணைவது புணர்ச்சி.
இது மொழியியல்

பண்டைய தமிழர் காசு - முதலாம் குலோத்துங்கச் சோழன்

முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070-1120 ஆண்டுக்காலத்தில் நாடாண்டவன். இது தங்கக் காசு. இது இவனது 36-வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்தக் காசின் நடுவில் இரட்டை-மீன், அமர்ந்திருக்கும் புலி, வில் ஆகியவை இரண்டு விளக்குக் கம்பங்களுக்கு இடையில் உள்ளன. சுற்றிலும்
மலைநாடு கொண்ட சோலா
என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வடமொழி எழுத்துக்கள்
குலோத்துங்கள் மலைநாடு எனப்பட்ட சேரநாட்டை வென்றான்.

படமும் செய்தியும் நன்றி

பண்டைய தமிழர் காசு - இராசேந்திர சோழன்

இராசேந்திர சோழன் கி.பி. 1014-1044 ஆண்டுக்காலத்தில் அரசாண்டுவந்தான்
அவனது செப்புக்காசு

இடப்புறம் வில். சேரனை வென்றதன் அடையாளம். அடுத்து புலி. இது சோழர் சின்னம். வலப்புறம் இரட்டை மீன். இது பாண்டியனை வென்றதன் அடையாளம் இருமருங்கிலும் விக்குக் கம்பங்கள். எல்லாவற்றுக்கும் கீழே வடமொழி எழுத்துக்கள்.
கங்கை தா சோலா 
என்னும் எழுத்துக்கள்
நன்றி

பண்டைய தமிழர் காசு - உத்தம சோழன்

உத்தம சோழன் காலம் கி.பி. 973-985
செம்பு

வெண்கொற்றக் குடை நிழலில் இரண்டு புலி 
இந்தக் காசின் அடுத்த பக்கம்

நன்றி 

Friday, 28 March 2014

பொத்தகம் - புத்தகம்

பொத்தகம் என்பது பொத்தல் போட்டுக் கோத்து எழுதிய  ஓலைச் சுவடிகளை அகத்தடக்கிக் கட்டிய கட்டு.


பண்டைய தமிழர் காசு - பாணர்

மதுரையை ஆண்ட பாணர் காசுகள் இவை

நன்றி - மேலும் படங்கள்

பாணர் காசு 
பாணர் காசு பிற்காலத் தமிழ் எழுத்துக்களுடன்.

பண்டைய தமிழர் காசு - இராசராசன்

இராசராசன் காசு 2
இராசராசன் காசு 1
இராசராசன் காலம் கி. பி. 980-1014
செம்பு
நன்றி - மேலும் காசுகள்

பண்டைய தமிழர் காசு - கொங்குச் சேரர்

இது கொங்குச் சேரர் காசு.
ஒரு பக்கம்
இது கொங்குச் சேரர் காசு.
மறு பக்கம்


மற்றொரு காசின் ஒரு பக்கம்
மற்றொரு காசின் ஒரு பக்கம் சேரன் புலிக்கொடி சோழனையும் மீன்கொடிப் பாண்டியனையும் வென்றான்
நன்றி

பண்டைய தமிழர் காசு - மலையமான்


மலையமான் காசு.

இதில் பொறிக்கப்பட்டுள்ள குதிரையின் பெயர் காரி

மலையமான் சங்ககால அரசன் (புறநானூறு 46)
மலையமான் திருமுடிக்காரி மலையமானின் மகன் (புறநானூறு 121, 122, 123, 126)
முள்ளூர் இவர்களின் தலைநகர்.

மலையன் என்னும் மலையமான் 'காரி' என்னும் குதிரை மீதிருந்து போரிட்டு வென்றவன் (காரி ஊர்ந்து பேரமர் கடந்த மாரி ஈகை மறப்போர் மலையன் - புறம் 158)

''காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரி" (சிறுபாணாற்றுப்படை 110)

இது இந்தக் காசின் மறுபக்கம்.

நன்றி


பண்டைய தமிழர் காசு - பல்லவர்

பல்லவர் காசு
பல்லவர் சின்னம் காளை
இதன் உருவம் நந்தி.
படுத்திருக்கும் காளை.
சிவன் கோயில்களில் இருக்கும் நந்தி.

காசு முத்திரைநில் உள்ள காளை ஆயர் போரிடும் காளை.

ஏறு தழுவல் என்னும் சல்லிக்கட்டு அல்லது காளைப்போர் சங்ககால வீர-விளையாட்டு.
நன்றி

பண்டைய தமிழர் காசு - பாண்டியர்

பாண்டியர் செப்புக்காசு
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
சங்ககாலம்

யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

நன்றி

பண்டைய தமிழர் காசு - சேரர்

சேர அரசரின் தங்கக் காசு
கி.பி. 13 ஆம் நூற்றாண்டு

சங்ககாலச் சேரரின் வழிவந்த கொங்குச்சேரர் கோவைப் பகுதியில் ஆண்ட காலம்.

அணிகலன் பூட்டப்பட்ட யானை

சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சாசின் இரண்டு பக்கங்கள்

நன்றி

பண்டைய தமிழர் காசு - சேரர்

இது சங்ககாலச் சேரர் செப்புக்காசு
யானைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
நாற்புறமும் அச்சு முத்திரைப் பதிவுகள் உள்ளன.

ஒப்புநோக்கத் தக்கவை

பல்யானைச் செல்கெழு குட்டுவன்
யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
வேழம் உடைத்து மலைநாடு - தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்களைப் பாடிய ஔவையார்.

சேர மன்னர்களின் பொறை அரசர் தலைநகரம் கருவூர். இங்கு பாயும் அமராவதி ஆற்றுப்படுகை, கேரள மாநிலம் பெரியாற்றின் தென்கரையிலுள்ள பரூர் (சங்ககாலப் பெயர் பந்தர்) முதலான இடங்களில் சேரர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் வடபகுதியில் உள்ள கந்தரோடையில் ஒரு காசு கிடைத்துள்ளது.
நன்றி 

ம் ன் திரிபு

தமிழில் ன் எழுத்தில் முடியும் சொற்கள் ம் எழுத்தில் முடியும் சொல்லாக மாறும்.
எப்போது?

அறம் கூறும் - திருக்குறள்
அறன் வரையான் - திருக்குறள்
அறன் ஆக்கம் - திருக்குறள்

புறன் அழீஇப் பொய்த்து நகை - திருக்குறள்
புறம் கூறிப் பொய்த்து - திருக்குறள்

மெய்யெழுத்து வரும்போது [ம்]
உயிரெழுத்து வரும்போது [ன்]
அரையுயிர் [வ] வரும்போது [ன்]

இப்படித் திரியாத சொற்கள் ஒன்பது என்று தொல்காப்பியம் வரையறுக்கிறது. 

ஆல் ஆன் - ஒடு ஓடு - பயன்பாடு

மூன்றாம் வேற்றுமை உருபுகள் இவை.
உடன் என்னும் உருபும் இதற்கு உண்டு.

என்னுடன் நீ

பாலொடு தேன் கலந்து அற்றே - திருக்குறள்
வாளோடு முன் தோன்றி மூத்த குடி - தனிப்பாடல்

கற்றதனால் ஆய பயன் - திருக்குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ - திருக்குறள்

வருமொழி உயிர்முதலா மெய்ம்முதலா என்னும் பாகுபாடு இல்லை.

ம் ன் இறுதிக்கு இந்தப் பாகுபாடு உண்டு.

ஓம் தெரிந்த மந்திரம்


ஓம் மந்திரம் புதிர் என்கின்றனர்.
இல்லவே இல்லை.
தமிழர் நன்கு அறிந்த ஒன்று.

வந்தேன், ஏம் - தன்மை உருபு - நான் கடவுள் இல்லை.
வந்தீர், ஈர்- முன்னிலை உருபு - நீ கடவுள் இல்லை
வந்தான், ஆன் - படர்க்கை உருபு. அவன் கடவுள் இல்லை
வந்தோம் - ஓம் - தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றும் இணைந்த படர்க்கை உருபு. மூவரும் இணைந்தால் கடவுள் தன்மை வந்துவிடும்.
இந்த ஓம் உருபே தமிழர் அறிந்த ஓம் மந்திரம்.

ஓ = அ இ உ மூன்றும் இணைந்த கூட்டொலி
ம் = வாய் மூடிய மோனநிலை
ஓம்
அவன் இவன் உவன், அது இது உது - மூன்றும் இணைந்த மோனநிலை எனல் தத்துவம். 

கல்வெட்டில் புள்ளி வைத்த மெய்யெழுத்து

கல் எழுத்து


இந்தக் கல்வெட்டு எழுத்தில் மெய்யெழுத்துக்குப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள எழுத்து தமிழ்ப்பிராமி
மொழி தமிழ்
பொறிக்கப்பட்டுள்ள 14 எழுத்துக்கள்
க ழ க கோ ப ட ட ன் ம க ன் செ ரு ம
இதனைக் கழக்கோ பட்டன் மகன் செரும(ன்) என்று படிக்கின்றனர்.
சொல்லின் கடைநிலை மெய்யெழுத்துக்கு மட்டும் புள்ளி உள்ளது.
இடையில் வரும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லை.
எனினும் மெய்யெழுத்து புள்ளி பெறும் என்பதற்குச் சான்றாகக் கிடைத்துள்ள அரிய கல்வெட்டு இது.

மேலும் விளக்கம் காண்க

இத்தகைய மேலும் ஒரு கல்வெட்டு

புள்ளி எழுத்துக்கள்

தமிழில் இக்காலத்தில் மெய்யெழுத்துக்குப் புள்ளி வைத்து எழுதுகிறோம். தொல்காப்பியர் காலத்தில் மேலும் சில எழுத்துக்கள் புள்ளி வைத்து எழுதப்பட்டன.

தொல்காப்பியர் காலத்தில் புள்ளி வைத்து எழுதப்பட்ட எழுத்துக்கள்
1
மெய்யெழுத்து
2
குற்றியலுகரம்
3
எ ஒ ஆகிய உயிரெழுத்துக் குறில்
4
மகரக் குறுக்கம். - ம எழுத்துக்கு மேலே புள்ளி வைத்து [ம்] என்னும் மெய்யெழுத்தாக மாற்றுகிறோம். அந்த மெய்யெழுத்தில் ம எழுத்துக்குள்ளே மேலும் ஒரு புள்ளி வைத்து எழுதினால் அது மகரக்குறுக்கம். வரும்வான் என்று தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டு  பஃதேர் என்பதில் [ஃ] ஒலிக்கப்படுவது போன்று கால்மாத்திரை அளவில் ஒலிக்கப்பட்டது போலும்.
வரும்வண்ணக்கன் என உரையாசிரியர் மகரக்குறுக்கத்துக்கு தரும் எடுத்துக்காட்டு இருசொல் ஒட்டு என மறுக்கப்பட்டுள்ளது.
5
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி

Thursday, 27 March 2014

எழுத்து வரிசை, நெடுங்கணக்கு, எழுத்து-அடுக்கு, எழுத்துப் பிறப்பு

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துக்களையும், 18 மெய்யெழுத்துக்களையும் ஒரு குறிப்பிட்ட முறையில் வரிசைப்படுத்தியுள்ளனர். இதனை நெடுங்கணக்கு என்று கூறுகிறோம்.

இந்த அடுக்குமுறை எழுத்தின் ஒலியோடு இணங்கி நிற்கும் தொடர்பினை உடையது. இதனை ஒலித்துப்பார்த்து எல்லாரும் உணர்ந்துகொள்ளலாம்.

உயிர்-எழுத்துக்கள்

அ ஆ - வாய் அங்காந்த ஒலியில் பிறக்கும்
இ ஈ - அத்துடன் இதழ் விரியப் பிறக்கும்
உ ஊ - இதழ் குவியப் பிறக்கும்
எ ஏ - அ இ எழுத்துக்களின் அகக்கூட்டொலி
ஐ - அ இ எழுத்துக்களின் புறக்கூட்டொலி, ஐயர்=அஇயர்
ஒ ஓ - அ உ எழுத்துக்களின் அகக்கூட்டொலி
ஔ -  அ உ எழுத்துக்களின் புறக்கூட்டொலி, ஔவை=அஉவை

மெய் எழுத்துக்கள் - வல்லினம், மெல்லினம்
மெல்லினம் மூக்கொலி இயைந்தது

க ங - அடிநாக்கு அடி-அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும்
ச ஞ - இடைநாக்கு இடை-அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும்
ட ண - நுனிநாக்கு நுனி-அண்ணத்தில் பொருந்தப் பிறக்கும்
த ந - நாக்கு விளிம்பு அண்பல்லில் பொருந்தப் பிறக்கும்
ப ம - இதழ் இயைந்து பிறக்கும்
ற ன - நூனிநாக்கின் அடிப்பகுதி அண்பல்லை முறையே வருட, ஒற்ற

இடையினம் - வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டது

ய - அடிநா விளிம்பு அண்ணம் உற - அரை-உயிர்
ர-  நுனிநா வளைந்து அண்ணம் உற
ல - நுனிநா வளைந்து அண்பல் உற
வ - பல்லும் இதழும் இயைய  - அரை-உயிர் - மொழியிறுதி வு ஒருவகைக் குற்றியலுகரம்.
ழ - நுனிநா வளைந்து அண்ணம் வருட
ள - நுனிநா வளைந்து அண்ணம் உற

ழ ள ற ன - நான்கும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் என்பது காட்ட இறுதியில்.


எழுத்து

எழுத்து என்னும் எதனைக் குறிக்கும்?
தொல்காப்பியம் சொல்கிறது.
1
ஒலியனைக் குறிக்கும். phoneme குறில், நெடில், ஆய்தம், அளபெடை, குற்றியலுகரம், குற்றியலுகரம் முதலான குறுக்க ஒலிகள், வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய பாகுபாடுகள்
2
உருவெழுத்தைக் குறிக்கும். script மெய்யெழுத்து, குற்றியலுகரம், மகரக்குறுக்கம், எ, ஒ குறில் எழுத்துக்கள்  ஆகிய எழுத்துக்கள் புள்ளி பெறும்.
3
ஒலியுருவன் - எழுத்துப் போலி phoneme altered script - நாய்=நாஇ, ஐயர்=அய்யர், ஔவை=அவ்வை - போன்றவை
4
பொருள்-ஒட்டு-எழுத்து prefix-phoneme அ இ உ - சுட்டு. எ - வினா.
5
புணர்ச்சியின்போது தோன்றும், மறையும், திரியும் எழுத்துக்கள் 

தமிழியல்

தமிழ் ஒரு மொழி.
தமிழுக்கென்று உள்ள தனித்தன்மைகள் பல.
அவற்றைக் காட்டுவதே இந்த வெளி.

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி